வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 ஜூலை 2018 (18:56 IST)

ரதிதேவியில் இருந்து சுதந்திரதேவியாக மாறிய சமந்தா

சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'இரும்புத்திரை' படத்தில் 'ரதிதேவி' என்ற டாக்டர் கேரக்டரில் சமந்தா நடித்திருந்தார். அவருக்கு இந்த கேரக்டர் மிகப்பொருத்தமான இருந்ததாக பாராட்டுக்கள் குவிந்தது.
 
இந்த நிலையில் ரதிதேவியாக நடித்த சமந்தா, தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'சீமராஜா' படத்தில் சுதந்திரதேவி' என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் இதுவரை எந்த நடிகையும் நடிக்காக சிலம்பாட்ட மாஸ்டராக சமந்தா நடித்துள்ளதாகவும் இந்த கேரக்டர் மிக இயல்பாக திரையில் தெரிய வேண்டும் என்பதற்காக மூன்று மாதங்கள் சிலம்பம் பயிற்சி எடுத்ததாகவும் சமந்தா கூறியுள்ளார்.
 
திருமணத்திற்கு பின்னரும் ரங்கஸ்தலம், நடிகையர் திலகம், இரும்புத்திரை என வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் சமந்தாவுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஒரு சிறப்பான தினம் ஆகும். இந்த நாளில்தான் அவர் நடித்த 'சீமராஜா' மற்றும் 'யுடர்ன்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.