ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Jeyakumar
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (11:33 IST)

நீ சினிமாவுக்கு போய் என்னத்த கிழிக்க போற..? – அபர்ணதியை கிண்டல் செய்த நண்பர்கள்!

Iruga Patru
இறுகப்பற்று படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது இதில் நடிகை அபர்னதி  ”நீயெல்லாம் சினிமாவில் என்னத்த கிழிக்க போறா என கேட்டனர் அவர்களுக்கான திரைப்படம் தான் இது” என கூறியுள்ளார்.


 
 இறுகப்பற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா  நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை அபர்ணதி, “இந்தப் படத்தில் நடித்தற்காக எனக்கு நானே முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். படம் பார்த்து வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி. நான் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு என் தந்தையின் நண்பரின் மகன் ‘நீ சினிமாவுக்கு போய் என்னத்த கிழிக்க போற’ என கேட்டார்.

 ஆனால் இன்று துபாயில் படம் ரிலீஸாகிறது. படத்தின் டிக்கெட்டை கிழித்துவிட்டு ‘இறுகப்பற்று’ படத்தை அவர் பார்க்கப் போகிறார்கள். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கு நன்றி. பல படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் எதுவும் முழுமை கொடுக்கவில்லை. இப்போதுதான் சினிமாவில் நான் வெற்றியைப் பார்க்கிறேன். இப்படியான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.விக்ரம் பிரபு, ஸ்ரீ என எல்லோரும் சிறப்பாக நடித்திருந்தனர். இப்படியான அழகான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி” என கூறினார் நடிகை அபர்ணதி.