திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:23 IST)

தென்னாப்பிரிக்கா செல்லும் விஜய் 68 படக்குழு! ஸ்டண்ட் காட்சிகளை படமாக்க திட்டம்!

பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் காமெடி, ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் கலந்த ஜானரில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்க உள்ளதாகவும், பாடல்களை மட்டும் செட் போட்டு சென்னையில் எடுக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடிக்கும் நிலையில் பல வெளிநாடுகளில் ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சென்னையில் பாடல் காட்சி படமாக்கப்பட்ட நிலையில், அடுத்த கட்ட ஷூட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.