திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (18:46 IST)

96-ல் இருந்த அதே மேஜிக்: சமந்தாவின் ஜானு டீசர் இதோ...

சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் உருவாகும் ஜானு பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

 
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது.  
 
இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.  அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில்  இப்படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது.  
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஜானு என்ற பெயரில் இணையத்தில் வெளியாகி தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 
 
தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் 96 ரீமேக்கை பார்க்க அவலாக உள்ளனர். இதோ இந்த படத்தின் டீசர்...