செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (14:02 IST)

த்ரிஷாவை மிஞ்சுவாரா சமந்தா - 96 தெலுங்கு ரீமேக் டைட்டில் லுக் போஸ்டர்!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர். 
 
அந்தவகையில்  கன்னட மொழியில் 99 என்ற பெயரில் இப்படத்தில் ரீமேக் எடுக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்ரைலர் வெளியிட்டனர். நடிகை பாவனா நடித்திருந்த அப்படத்தின் ட்ரைலர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகி ட்ரோல் செய்து கலாய்த்து தள்ளினர்.   அதையடுத்து  தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்து நடிப்பில்  இப்படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஜானு என்ற பெயரில் இணையத்தில் வெளியாகி தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. ஜானு படத்தின் மூலம்  த்ரிஷாவை மிஞ்சுவாரா சமந்தா...? பொறுத்திருந்து பார்ப்போம். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A tribute to unconditional love... here's the first look of my next film, #JAANU ❤️

A post shared by Sharwanand (@imsharwanand) on