ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 மார்ச் 2021 (12:26 IST)

சூர்யாவுக்காக உருவாக்கப்பட்டதா சார்பட்டா பரம்பரை?

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலா படத்தின் வெளியீடு முடிந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு  பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இணையத்தில் கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து இப்போது வெளியாகி படத்தின் கதாபாத்திர அறிமுகங்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்துள்ளன. இந்நிலையில் இந்த கதையை முதலில் பா ரஞ்சித் சூர்யாவிடம்தான் சொன்னதாகவும், ஆனால் அப்போது அவரால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது.