1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: செவ்வாய், 23 மே 2017 (12:09 IST)

நடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!

நடிகர் சூர்யாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!

கடந்த 2009-ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.


 
 
கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ் சினிமா உலகில் பெரும் புயலை வீசிய சம்பவம் சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி போலீசாரால் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நடிகை புவனேஷ்வரி தனது வாக்குமூலத்தில் சில மேலும் நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறியதாக ஊடகங்கள் அந்த நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டது.
 
இதனை பார்த்து சினிமா உலகம் கொந்தளித்தது. பத்திரிகைகளுக்கு எதிராக வாய்க்கு வந்தவாறு பேசினர். மேலும் அந்த நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டன கூட்டம் நடத்தினர் நடிகர் நடிகைகள்.
 
இந்த கண்டன கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்களை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசினர். இதனையடுத்து மிகவும் மோசமாக பேசிய நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், சத்தியராஜ், சூர்யா, அருண் விஜய், சரத்குமார், விவேக், சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
 
இந்த வழக்கின் விசாரணை நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு சம்மந்தப்பட்ட நடிகர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் அவர்கள் ஆஜராகவில்லை. இதனால் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது நீலகிரி குற்றவியல் நீதிமன்றம்.