புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (21:16 IST)

'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் விமர்சனம்

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நேற்றிரவு இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
 
வழக்கமாக சுந்தர் சி படங்களில் குடும்ப பிரச்சனைகள், காமெடி, ஹீரோயின் கவர்ச்சி ஆகியவை இருக்கும். ஆனால்  'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் மூன்றுமே மிஸ்ஸிங் என டிரைலரில் இருந்து தெரிகிறது.
 
சிம்புவின் சுயதம்பட்ட வசனங்கள், மொக்கையான பஞ்ச்  டயலாக்குகள், அலட்டலான நடிப்பு ஆகியவை இந்த படத்திலும் இருக்கும் என்பதால் டிரைலரை பார்த்தவுடன் படம் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை. 'கெத்து தான் என் சொத்து, 'நான் பொறந்ததில் இருந்தே ராஜா' போன்ற பஞ்ச் டயலாக்குகளை ரசிக்க முடியவில்லை
 
மேகா ஆகாஷ் இரண்டு முறை டிரைலரிலேயே சிம்புவுக்கு முத்தம் கொடுக்கின்றார் என்றால் படத்தில் எத்தனை முறை என்று தெரியவில்லை. ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் படத்திற்கு ஆறுதலாக இருப்பார்கள் போல் தெரிகிறது. பாடல்களும் படத்தில் பார்க்கும் வகையில் இல்லை. மொத்தத்தில் சிம்புவுக்கு இந்த படம் இன்னொரு 'AAA' படமாக இருக்கும் போல் தெரிந்தாலும் படம் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்