செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 மே 2022 (15:23 IST)

VTV இரண்டாம் பாகம்… கௌதம் மேனனுக்கு விஜய் சேதுபதி சொன்ன அட்வைஸ்?

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு- திரிஷா- சமந்தா  நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. மீண்டும் சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை அவர் இயக்கியிருந்தார். தற்போது 3 வது முறையாக சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 திரைப்படம் குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இடையில் இந்த படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க கௌதம் மேனன் முயற்சி செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கௌதம் மேனனிடம் விஜய் சேதுபதி “அந்த படத்தில் சிம்பு, த்ரிஷா நடித்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் இப்போது திரிஷா – சிம்பு ஜோடியை வைத்தே கௌதம் இயக்குவதற்காக முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.