1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 23 நவம்பர் 2022 (19:25 IST)

சேலையில் சிக்குன்னு இருக்கியேமா... விஜே ரம்யா வெளியிட்ட கியூட்டான வீடியோ இதோ!

விஜே ரம்யா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோ இதோ!
 
தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்ற தொகுப்பாளினி ரம்யாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் உள்ளது.  ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாது "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.
 
2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய  ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.
 
 
இதனிடையே தனது உடல் எடையை சிக்கென தோற்றத்திற்கு மாற்றி சின்ன பெண்ணாக மாறி வித விதமான போட்டோ வீடியோ என வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட் அழகியாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/ClSYIEXLMEA/