1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (15:22 IST)

எனக்கு இப்படிதான் அடிபட்டுச்சு... வீடியோ வெளியிட்ட மணிமேகலை!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
 
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் மணிமேகலை போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டுவிட்டதாக கூறி சில வாரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியாது என கூறினார். 
 
இதனால் மணிமேகலையின் ரசிகர்கள் பலர் என்ன ஆச்சு ஏதாச்சு என பதறிப்போன நிலையில் தற்போது அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சுடு தண்ணி கொதிக்க வைத்து இறக்கும் போது காலில் தவறி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.