திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 30 மார்ச் 2020 (12:17 IST)

இதுல எது என் மொகறக்கட்ட? கண்டுபிடிங்க பார்க்கலாம் - ரசிகர்களுக்கு டெஸ்ட் வைத்த மணிமேகலை!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவில் வீட்டிலேயே இருந்து வருகிறார். கிராம குழந்தைகளுடன் விளையாடுவது, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்தை தெரிவிப்பது என பிசியாக இருந்து வரும் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையாக இருந்தபோது எடுத்துக்கொண்ட குரூப் புகைப்படமொன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "யாரோ என்னை பயங்கரமா டென்ஷன் பண்ணியிருக்காங்க. அதான் என் மொகறக்கட்ட இப்படி இருக்கு. இந்த போட்டோவில் என்னை ஈஸியா என்ன கண்டுபிடிச்சிடலாம்" என கூறியுள்ளார். இதில் எந்த குழந்தை மணிமேகலை?  நீங்களே கண்டுபிடிங்க பார்ப்போம்....