திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 18 மார்ச் 2021 (22:08 IST)

மணிமேகலை வீட்டுக்கு விசிட் அடித்த ஷகிலா - கட்டியணைத்து மனம் உருகிய பதிவு!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 
 
இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் மணிமேகலை போட்டியாளராக பங்கேற்று கலக்கி வருகிறார். 
 
இவருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டுவிட்டதாக கூறி சில வாரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியாது என கூறினார். அதையடுத்து அவரது ரசிகர்கள் நலம் விசாரித்து பிராத்தனை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவரான நடிகை ஷகிலா,  மணிமகேலை வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளார். இது குறித்து மணிமேகலை, லவ் யூ மம்மி என்னை பார்க்க வந்ததற்கு நன்றி. உங்களது ஆறுதலான வார்த்தைக்கு நன்றி. நீங்கள் மிகவும் அன்பானவர் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.