"ஊராட்சி தலைவரானார் விஜே ஜாக்குலின்" - வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

Last Updated: திங்கள், 29 ஜூலை 2019 (13:28 IST)
தமிழ் தொலைக்காட்சிகளிலேயே புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தமிழக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பத்து விஜய் தொலைக்காட்சி. 


 
பல திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுத்து பிரபல படுத்திய பெருமை விஜய் டிவி - யையே சேரும். அப்படி தான் தன் வெகுளியான பேச்சு திறமையை வைத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்த பேவரைட் விஜே - வாக மாறினார் ஜாக்குலின்
 
இவர் தொலைக்காட்சிகளில் நிகச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் போதே படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சிறு சிறு கதாபாத்திரங்ககளில் நடித்து வந்தார். இதற்கிடையில் சில நாட்களாக தொலைக்காட்சி பக்கம் இவரை காண முடியவில்லை. 
 
இந்நிலையில் தற்போது அதே விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்க துங்கியுள்ளார் ஜாக்குலின். ஆம் தேன்மொழி என்ற அந்த சீரியலில் மிகவும் கலகலப்பாக நடிப்பை வெளிப்படுத்தி தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட  ரசிகர்கள் ஜாக்குலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :