1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (16:53 IST)

தமிழக முதல்வரை சந்தித்த விவேக் மனைவி: கோரிக்கையை ஏற்பாரா?

vivek wife
தமிழக முதல்வரை சந்தித்த விவேக் மனைவி: கோரிக்கையை ஏற்பாரா?
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி இன்று சந்தித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது விவேக் வாழ்ந்த வீடு உள்ள சாலைக்கு அவரது பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து உள்ளார் 
 
இந்த கோரிக்கை மனு பரிசீலிக்கப்படும் என முதல்வர் தரப்பிலிருந்து கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது விவேக்கின் மகள் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் விவேக் மரணமடைந்தார் என்பதும் அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.