விவேக் ஓபராய்க்கு நெகட்டிவ் கேரக்டர் இல்லையா! அப்படியென்றால் 'விவேகம்' வில்லன் யார்?
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சிறுத்தை சிவா, இந்த படத்தில் அனைவரும் நினைப்பது போல் விவேக் ஓபராய்க்கு நெகட்டிவ் ரோல் இல்லை என்றும், அவருக்கு இந்த படத்தில் பவர்ஃபுல் ரோல் என்றும் கூறினார். விவேக் ஓபராய் வில்லன் இல்லையென்றால் வேறு யார் வில்லன்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித்தும் விவேக்கும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டதாகவும், அஜித்தை விவேக் அண்ணா என்றுதான் கூப்பிடுவார் என்றும் சிவா கூறியுள்ளார்.
மேலும் ஏற்கனவே ஓரளவு தமிழ் தெரிந்து வைத்திருந்த விவேக், இந்த படம் முடிவதற்குள் நன்கு தமிழ் பேச கற்றுக்கொண்டார் என்றும் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.