அடப்பாவிகளா! இப்படியெல்லாமா யோசிப்பிங்க: 'விவேகம்' டீசர் படுத்தும் பாடு
தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாகி கிட்டத்தட்ட 24 மணி நேரம் ஆகிவிட்ட போதிலும் அதன் தாக்கம் இன்னும் சிறிது கூட சமூக வலைத்தளங்களில் குறையவில்லை.
'விவேகம்' படக்குழுவினர்கள் கூட யோசிக்காத அளவின் அந்த டீசரில் உள்ள காட்சிகளுக்கு பலவிதமான விளக்கங்களை அஜித் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த டீசரில் வரும் வசனமான "'இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்டா..தோத்துட்டன்னு உன் முன்னாடி நின்னு சொன்னாலும், நீயா ஒத்துக்கறவரைக்கும் எவனாலும், எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது, Never Ever Give up' இந்த வசனத்தில் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றது என்பதை எண்ணி பாருங்கள். சரியாக 25 வார்த்தைகள் இருக்கும். இந்த 25, AK25ஐ குறிப்பதாக ஒரு ரசிகர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்
இப்படியெல்லாமா யோசிக்கிறிங்க என்று அஜித்தின் மற்ற ரசிகர்களும், படக்குழுவினர்களும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.