1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 9 ஆகஸ்ட் 2017 (16:27 IST)

சன் தொலைக்காட்சியில் விவேகம் - ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் தல அஜீத் நடித்து விரைவில் வெளியாகவுள்ள விவேகம் படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.


 

 
இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விவேகம். இப்படத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வீரம், வேதாளம் ஆகிய படத்திற்கு மூன்றாவது முறையாக அஜீத்தும், சிவாவும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 
 
எனவே, இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வருகிற 24ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் நெட்வொர் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. எனவே, படம் வெளியாகி சில மாதம் கழித்து இப்படத்தை சன் டிவியில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். 
 
சூர்யாவின் சிங்கம்-3 மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து இயக்கும் புதிய படம் உள்ளிட்ட உரிமைகளை ஏற்கனவே சன் டிவி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.