1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (14:17 IST)

விவேகம் படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் விவேகம் படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக் தற்போது வெளியாகியுள்ளது.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் விவேகம். இந்த படம் அடுத்த மாதம் வெளியாகும் என இயக்குநர் சிவா தெரிவித்து இருந்தார். படத்தில் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் பாடல்களை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிட்டு வருகின்றனர் படக்குழுவினர்.
 
அனிருத் இசையில் அமர்களமாக வந்திருக்கும் பாடல்கள் இரண்டு ஏற்கனவே வெளியானது. சர்வைவா மற்றும் தடை அதை உடை என்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது சிங்கிள் ட்ராக் அறிவித்தபடி தற்போது வெளியாகியுள்ளது.