வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (20:33 IST)

அஜித்தின் விவேகம்: இன்னொரு ஃபர்ஸ்ட்லுக், அதன் பின்னர் டீசர்-டிரைலர்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக இம்மாத இறுதியில் படக்குழுவினர் மீண்டும் பல்கேரியா செல்கின்றனர். அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது.



இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் மே மாதம் 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்னர் இந்த படத்தின் இன்னொரு ஃபர்ஸ்ட்லுக் வெளிவரவுள்ளதாம். அதன் பின்னர் படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்னர் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அஜித், அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.