திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 24 டிசம்பர் 2018 (18:58 IST)

அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி

அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்தின் டீசர்  எப்போது வெளியாகும் என்பது குறித்து இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
 
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர்,ரமேஷ் திலக், தம்பிராமையா, கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ள படம் விஸ்வாசம்.  இந்த படமும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. 
 
இந்த படத்தின் பாடல்கள் சத்தம் இல்லாமல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. இனி விஸ்வாசம் டீசர் எப்போது வெளியாகும் என இயக்குனர் சிவாவை தொடர் கேள்விகளால் ரசிகர்கள் துளைத்து வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, பேசிய சிவா, விஸ்வாசம் டீசர் இன்னும் 10 நாளுக்குள் வெளியாகும் என தெரிவித்தார். வரும் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கும் சமயத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.