1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (19:27 IST)

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

katta kushthi
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது 
 
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ’சண்ட வீரச்சி’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வைரலாகி வருகிறது என்பதும், இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
பிரபல இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் மாரியம்மாள் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
விஷ்ணு விஷால் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா நடித்துள்ளார். இந்த படத்தை சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கியுள்ளார் 
 
Edited by Mahendran