விஷ்ணுவிஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்” சென்சார் மற்றும் ரன்னிங் தகவல்கள்!
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர்” திரைப்படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
விஷ்ணு விஷால் நடித்த எஃப்.ஐ.ஆர்” திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் டிரைலர் டீசர் மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்த படம் தற்போது சென்சார் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்
மேலும் இந்த படம் 2 மணிநேரம் 35 நிமிடங்கள் அதாவது 155 நிமிடங்கள் மொத்தம் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விஷ்ணு விஷாலின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது