1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 13 மே 2023 (09:04 IST)

கட்டா குஸ்தி இயக்குனரோடு அடுத்த படத்தில் இணையும் தனுஷ்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி என்ற திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸான இந்த படம் அதன் பின்னர் பார்வைகளைக் கவர்ந்தது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள விஷ்ணு விஷால் இந்த படத்தின் வியாபாரம் 30 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த ஹிட்டையடுத்து தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் இயக்குனர் செல்லா அய்யாவு. இந்த படத்தை மதுரை அன்புச்செழியன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இப்போது இயக்குனர் செல்லா ஈடுபட்டு வருவதாகவும், தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை முடித்த பின்னர் இந்த படம் தொடங்கப்படும் என தெரிகிறது.