செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By J.Durai
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (09:56 IST)

நடிகர் விஷ்ணு மஞ்சு தனது மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற கலைஞர்களுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷ்ணு மஞ்சு, தெலுங்கு திரையுலக நடிகர்கள் சங்கமான ‘மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்ஸ்’ (Movie Artists Association - MAA)-ன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
 
இந்த நிலையில், ஆக்ஸ்ட் 9 ஆம் தேதி விஷ்ணு மஞ்சுவின் மகள் அய்ரா வித்யாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு, MAA சங்கத்தில் உள்ள ஆதரவற்ற கலைஞர்களின் நலனுக்காக ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருடைய இந்த குறிப்பிடத்தக்க பங்களிப்பு, நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் கலைஞர்களுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு தேவையான ஆதரவையும், அளித்துள்ளது.
 
கடந்த மூன்று ஆண்டுகளில், விஷ்ணுவின் தொலைநோக்கு தலைமையின் கீழ் MAA சங்கம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது. எதிர்காலத்திற்கான அவரது திட்டங்களில் சங்கத்திற்கான பிரத்யேக கட்டிடமும் அடங்கும். அந்த வகையில், விஷ்ணு மஞ்சுவின் இத்தகைய நடவடிக்கைகளும், அர்ப்பணிப்பும் சங்க உறுப்பினர்களுக்கு நம்பிக்கை அளிப்பதோடு, அவரால் விரைவில் பிரத்யேக கட்டிடம் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தலைவராக சங்கத்திற்கு மகத்தான பங்களிப்பை கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், நடிகர், நடிகைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து சில யூடியூபர்களால் வெளியிடப்படும் அவதூறு தகவல்கள் மற்றும் வீடியோக்கள் அதிகரித்து வருவதற்கு எதிராக விஷ்ணு மஞ்சு தைரியமாக சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
 
இந்த துணிச்சலான நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள பல்வேறு திரைப்படத் தொழில்களில் இருந்து பரவலான ஆதரவைப் பெற்றதோடு, பல மூத்த நடிகர்கள் சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அவரது முயற்சிகளைப் பகிரங்கமாகப் பாராட்டினர். விஷ்ணுவின் தீர்க்கமான நடவடிக்கை ஒரு அச்சமற்ற தலைவர் என்ற அவரது நற்பெயரை உறுதிப்படுத்தியதோடு, தெலுங்கு திரையுலகிற்கு அப்பாற்பட்ட கலைஞர்களிடமிருந்து அவருக்கு ஆதரவையும் மரியாதையையும் பெற்று தந்தது.
 
கலைஞர்கள் சமுதாயத்தின் நலனுக்காக விஷ்ணுவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, தலைமை ஆகியவற்றிற்காக திரைப்பட கலைஞர்கள் சங்கம் அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளது.
 
இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து விஷ்ணு மஞ்சு நடித்து தயாரிக்கும், சர்வதேச அளவில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பில், இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உருவாகிவரும் வரும் ‘கண்ணப்பா’ 2024 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.