புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (10:57 IST)

விஷால் போட்ட புதிய கண்டிஷன் - தப்பிக்குமா தமிழ் சினிமா?

புதிய படங்களின் வெளியீட்டு தேதிகளை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

 
முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. எனவே, அப்படங்களின் வெளியீட்டு தேதி தள்ளிப்போகிறது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், ஒரே நாளில் அதிக படங்கள் வெளியாவதாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை எப்படி தவிர்ப்பது என விஷால் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
 
முடிவில், புதிய படங்களின் வெளியீட்டு தேதிகளை தயாரிப்பாளர் சங்கத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் விஷால் உத்தரவிட்டுள்ளார்.