செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (18:56 IST)

பணத்துக்காக விஷால் என்னை திருமணம் செய்கிறாரா?: கொதித்தெழுந்த அனிஷா!

தமிழ்ப் பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால் . இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச்செயலாளராகவும் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வருகிறார். 


 
விஷால் திருமணம் குறித்து நீண்ட காலமாக தமிழ் சினிமா உலகில் பேசப்பட்டு வந்தது. நடிகை வரலக்ஷ்மியை அவர் காதலித்ததாகவும் தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன . இருந்தாலும் விஷால், ‘நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடித்த பிறகு அதில் முதல் திருமணமாக எனது திருமணம் நடைபெறும்’ என கூறி காலம்தாழ்த்தி வந்தார்.
 
இந்நிலையில் அண்மையில் நடிகர் விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவிவந்தது. ஆனால் விஷால் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரே அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.
 
தற்போது நடிகை அனிஷாவை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். அதாவது விஷால் பணத்திற்காக தான் உங்களை திருமணம் செய்கிறார். பணத்தை வைத்து யாரை வேண்டுமானாலும் வாங்கலாம். உங்களை நினைத்தால் வெட்கமாக உள்ளது என்று நெட்டிசன் ஒருவர் அனிஷாவை விளாசினார்.  தற்போது அதற்கு பதிலளித்துள்ள அனிஷா, 
 
பணத்திற்காக விஷால் தன்னை காதலிக்கவில்லை என்று  கோபப்படாமல் பொறுமையாக பதில் அளித்துள்ளார். 
 
அதற்கு மீண்டும் அந்த நபர்,   


 
சாரி, உங்கள் பணம் இல்ல அப்பாவின் பணம். இல்லை என்றால் ஆட்டு மூஞ்சி போன்று இருக்கும் உங்களை எல்லாம் யார் காதலிப்பார்கள்...அவர் தன் முடிவை பரிசீலிக்க வேண்டும்... வரு எவ்வளவோ நன்றாக இருக்கிறார் என்று அந்த நெட்டிசன் மீண்டும் கமெண்ட் போட்டுள்ளார். 
 
இதற்கு அனிஷா பதில் அளித்ததை பார்த்த சிலர் ஃப்ரீயா விடுங்க, இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் பதில் அளிக்க வேண்டாம். அவர்களுக்கு இதே வேலையாகிவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.
 
இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் அனிஷா , விஷாலுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.