1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 22 பிப்ரவரி 2021 (08:30 IST)

விஷாலின் ‘சக்ரா’ மூன்று நாள் சென்னை வசூல் எவ்வளவு?

நடிகர் விஷால் நடித்த ‘சக்ரா’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்தின் வெள்ளி சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் சென்னை வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
விஷால் நடிப்பில் எம்எஸ் ஆனந்தன் இயக்கிய ‘சக்ரா’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படம் பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக ரிலீசானது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து ரசித்து வருவதாக கூறப்படுகிறது 
தற்கால டெக்னாலஜி உலகில் என்னென்ன முறைகேடுகள் செய்யலாம் என்பது குறித்து இந்த படம் அலசி இருப்பதாகவும் இந்த படம் மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் ‘சக்ரா’ திரைப்படம் சென்னையில் கடந்த 3 நாட்களில் 98 லட்சம் ரூபாய் வசூல் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெள்ளிக்கிழமை முதல் நாளில் 31 லட்சம், சனிக்கிழமை 33 லட்சம் ஞாயிற்றுக்கிழமை 34 லட்சம் என வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது 
 
இருப்பினும் சென்னை தவிர மற்ற இடங்களில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இல்லை என்றும் மொத்தத்தில் இந்த படம் வசூல் அளவில் சராசரி திரைப்படம் என்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது