1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2017 (23:34 IST)

ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் விஷால் எடுக்கும் அதிரடி முடிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால், வரும் 6ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழா ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

+
 


பதவியேற்பு விழா முடிவடைந்ததும் முதல் நாளே சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார். குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கான மானியம் குறித்த பிரச்சினை பற்றியும் அரசுடன் பேசி ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் இனிமேல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நன்மைக்காக  தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய நடிகர் சங்கமும் சேர்ந்து குரல் கொடுக்கும் என்றும் விஷால் கூறியுள்ளார்.  

மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டத்திலேயே திருட்டு விசிடி பிரச்சினையை கையில் எடுப்பது குறித்த ஆலோசனை இருக்கும் என்றும் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு தலைவராக இயக்குநர் மிஷ்கின் செயல்படுவார் என்றும் விஷால் அதிரடியாக தெரிவித்துள்ளார்