திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (08:43 IST)

ஸ்டிரைக் முடிவது எப்போது? விஷால் பதில்

கடந்த 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னும் மூன்று நாட்களில் இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்று தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் கூறியுள்ளார்.

நேற்று தனியார் நட்சத்திர ஓட்டலில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 7 மணி நேரம் நடந்த நிலையில் இதுகுறித்து விஷால் கூறியதாவது:

திரையரங்க உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்தோம். இந்த பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது என்பதால் இதற்கான முடிவு இன்னும் மூன்று நாட்களில் தெரியவரும் என்று கூறினார்.

ரிலீசுக்கு தயாராக ஏற்கனவே சுமார் 50 படங்கள் வரிசையில் உள்ளது. அதுமட்டுமின்றி சென்சார் செய்ய தயார் நிலையில் சுமார் 20 படங்கள் உள்ளது. எனவே இன்னும் வேலைநிறுத்தம் நீடித்தால் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் அதிகளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் விரைவில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு அனைத்து தரப்பினர்களூம் முயற்சித்து வருகின்றனர்.