விஷால்-கார்த்தி படத்தின் டைட்டில் மற்றும் பிற விபரங்கள்
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக விஷால் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்து அதில் கிடைக்கும் சம்பளத்தொகையை நிதியாக தரவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின
இந்த நிலையில் தற்போது அந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்பது தான் அந்த டைட்டில். நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழில் இந்த படத்தை இயக்குகிறார் பிரபுதேவா
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இந்த படத்தை பிரபுதேவாவின் சொந்த நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தின் ஒரு நாயகியாக சாயிஷா சேகல் நடிக்கவுள்ளதாகவும் இன்னொரு ஹீரோயின் தேர்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 'சத்ரியன்' சுபாஷ் கதை எழுதும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர்கள் சுபா வசனம் எழுதுகின்றனர்.,