திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (14:27 IST)

கார்த்தியின் விருமன் திரைப்படத்தில் ரிலீஸில் மாற்றம்? முன்கூட்டியே ரிலீஸ் ஆக வாய்ப்பு!

விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி நடித்த விருமன்  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்போது நீண்ட விடுமுறை வருவதால் அந்த தேதியைப் படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆனால் இப்போது விருமன் ரிலீஸ் எதிர்பார்த்ததை விட முன்னரே ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் கோப்ரா திரைப்படம் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளதால், விருமன் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்கு முன் தள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.