1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2017 (23:02 IST)

தனுஷின் 'விஐபி 2' டிரைலர் ரிலீஸ் தேதி. செளந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு

தனுஷ் நடிப்பில் ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.



 


இந்த படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி பாடல்கள் மற்றும் தமிழ், தெலுங்கு டிரைலர் ஆகியவை வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளதாக செளந்தர்யா தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்தி டிரைலர் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.