வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (18:47 IST)

தெலுங்கில் ரீமேக் ஆகும் விநோயத சித்தம்! சமுத்திரக்கனி வேடத்தில் சூப்பர் ஸ்டார்!

விநோதய சித்தம் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து இப்போது தெலுங்கில் அதை ரீமேக் செய்ய உள்ளார் சமுத்திரக்கனி.

இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது பிஸியான நடிகராகி விட்டார். ஆனாலும் இடையில் படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். இந்த படம் அக்டோபர் 13 ஆம் தேதி வெளியாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து இப்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார் சமுத்திரக்கனி. தமிழில அவர் நடித்த வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா நடித்த வேடத்தில் மோகன் லாலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.