1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 8 ஜூலை 2021 (14:35 IST)

பைனான்சியர்களோடு பிரச்சனை… விமலுக்கு வந்த சிக்கல்!

நடிகர் விமல் தயாரித்த மன்னார் வகையறா படத்தால் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தார்.

காமெடி மற்றும் குடும்பப் படங்களில் நடித்து வந்த விமல் தற்பொழுது ஆக்‌ஷன் களத்தில் குதித்துள்ளார். இந்தப் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். ரோபோ ஷங்கர் மாரி தனுஷ் கெட்டப்பில் கலக்கி இருக்கிறார். ’தேவதையை கண்டேன்’, ’திருவிளையாடல் ஆரம்பம்’, போன்ற படங்களை இயக்கிய பூபதிபாண்டியன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நடிகர் விமல் தயாரிப்பில், ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் படம் வெளியாகி அட்டர் ப்ளாப் ஆனது.

இதனால் படத்தின் பைனான்சியர்களோடு விமலுக்கு மோதல் ஏற்பட்டது. இது சம்மந்தமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. இதனால் இப்போது விமலை வைத்து படம் தயாரிக்கவோ, அவர் படத்துக்கு பைனான்ஸ் செய்யவோ யாரும் முன்வரவில்லையாம்.