செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (15:07 IST)

விஜய் படத்தை தயாரிப்பது எப்போது?… பிரபல தயாரிப்பாளர் பதில்!

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் அடுத்தடுத்து பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். சிம்பு, ஜெயம் ரவி ஆகியோர் அவர் தயாரிப்பில் படங்களில் நடித்துள்ளனர்.

நேற்று அவர் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை நடந்தது. இந்த படத்தில் ஜெயம் ரவியோடு கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடிக்கின்றனர். அர்ஜுனன் ஜூனியர் இயக்க , ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

நேற்று நடந்த பூஜையின் போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் விஜய்யுடன் படம் பண்ணுவது எப்போது எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கணேஷ் “விஜய் ரெடி என்றால் நானும் ரெடி” எனக் கூறியுள்ளார்.