ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (07:41 IST)

துருவ நட்சத்திரம் படத்தை பார்த்த விக்ரம்… ரியாக்‌ஷன் என்ன?

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் படத்தின் பணிகள் முடிந்துள்ள நிலையில் படத்தை தனது குடும்பத்தோடு நடிகர் விக்ரம் பார்த்துள்ளாராம். படம் பார்த்த பின்னர் அவர் இயக்குனர் கௌதம் மேனனைப் பாராட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.