வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (10:20 IST)

’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!
தமிழில் சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 
விக்ரம் கேரக்டரில் சயிப் அலிகான், வேதா கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன் நடித்து வரும் இந்த படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று ஹிருத்திக் ரோஷன் அவர்களின் பிறந்தநாளை அடுத்து விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படக்குழுவினர் ஹிருத்திக் ரோஷனின் வேதா போஸ்டரை வெளியிட்டுள்ளனர் 
 
இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாரதா ஸ்ரீநாத் கேரக்டரில் ராதிகா ஆப்தே நடித்துள்ளார் என்பதும் இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.