அரிமா நம்பி இயக்குனரின் படத்தில் விக்ரம்


Mahalakshmi| Last Modified புதன், 11 மார்ச் 2015 (08:53 IST)
விக்ரமுக்கு என்று சில விதிமுறைகள் உண்டு. ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க மாட்டார். ஒரு படம் முடிந்துதான் அடுத்தப் படம். அவர் தேர்வு செய்கிற படங்கள் குறைந்தது இரண்டு வருடங்களையாவது எடுத்துக் கொள்ளும்.
 
 

இதன் காரணமாக தமிழ் சினிமாவில் எப்போதாவது தென்படும் விருந்தாளியாகிவிட்டார் விக்ரம்.
 
இந்த இரண்டு வருட வேலையெல்லாம் இனி உதவாது என்பதை கொஞ்சம் தாமதமாக உணர்ந்திருக்கிறார் விக்ரம். வருடத்துக்கு குறைந்தது இரு படங்கள் என்பதே இப்போது அவரது இலக்கு. முடிந்தால் மூன்று.
 
விஜய் மில்டனின் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறவர் அடுத்து இரு படங்களில் நடிக்கயிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஒன்று கௌதம் இயக்கும் படம். இன்னொன்று அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கும் படம். இந்த இரண்டும் இன்னும் பேச்சுவார்த்தை அளவில்தான் உள்ளன.
 
விரைவில் விக்ரமிடமிருந்தே அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.


இதில் மேலும் படிக்கவும் :