1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (12:57 IST)

விக்ரம் பிரபுவின் அடுத்த இயக்குநர் இவர்தான்…

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்த ‘சத்ரியன்’, சமீபத்தில் வெளியானது. தற்போது  ‘நெருப்புடா’, ‘பக்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படத்திலும் ஹீரோயினாக நிக்கி கல்ரானி நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, சக்தி சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம் பிரபு.

 
ஒளிப்பதிவாளரான சக்தி சரவணன், ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘மங்காத்தா’ என வெங்கட் பிரபு படங்களுக்கு அதிகமாக ஒளிப்பதிவு செய்தவர். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம்தான் இவருடைய  ஒளிப்பதிவில் கடைசியாக வெளியான படம்.
 
சிம்பு, சினேகா நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் இயக்குநரானார் சக்தி சரவணன். கெளதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் ‘சிப்பாய்’ படத்தை இயக்கி வந்தார். பைனான்ஸ் பிரச்னையால் அந்தப் படம் பாதியிலேயே நிற்க, அடுத்ததாக விக்ரம் பிரபுவை இயக்கப் போகிறார்.