1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 23 மே 2022 (15:25 IST)

இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு செல்ல வேண்டாம்: சவுதி அரேபியா அறிவிப்பு!

saudi
இந்தியா உள்பட 16 நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என சவுதி அரேபியா மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது 
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து இந்தியா, பெலாரஸ், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு சவுதி அரேபிய மக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் சவுதி அரேபிய மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தாலும், தினமும் 2,000 பேருக்கு அதிகமாக கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது