திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (21:49 IST)

விக்ரம்- பா.ரஞ்ச்சித் கூட்டணியில் உருவாகும் படத்தின் ''டைட்டில் டீசர்'' ரிலீஸ்

THANGALAN
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவில் நடக்க உள்ளது.

இந்த படம் 19 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவின் கோலார் தங்க வயல் பகுதிகளில் நடந்த கதையைக் கொண்டு உருவாகிறது என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பூ பார்வதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று அந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விக்ரம் – பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு ''தங்கலான்'' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த  டைட்டில் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj