1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 5 அக்டோபர் 2021 (22:10 IST)

கமல்ஹாசன் அண்ணன் நடித்த கடைசி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கமல்ஹாசன் அண்ணன் நடித்த கடைசி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு சாருஹாசன் மற்றும் சந்திரகாசன் ஆகிய இரண்டு சகோதரர்கள் இருந்தனர் என்பது தெரிந்ததே 
 
ஏற்கனவே சாருஹாசன் நடிகர் என்பதும் அவர் தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சந்திரகாசன் அவர்களும் நடிகர் என்பதும் அவர் நடித்த கடைசி படம் வரும் 8ஆம் தேதி ஊட்டியில் வெளியாக ஏற்பதாகவும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்.அவர் நடித்த கடைசிபடம்‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’அக்டோபர் 8ம் தேதி @SonyLIV -ல் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்’ என பதிவு செய்துள்ளார்.