1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (08:59 IST)

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் விக்ரம்மின் மகாவீர் கர்ணா!

"பாகுபலி" படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து உலகம் முழுவதும் மிகப்பெரும் சாதனையை படைத்ததை அடுத்து தென்னிந்திய சினிமாவில் புராண கால படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன.  அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாக்களிலும்  தொடர்ந்து சரித்திர படங்களை பிரமாண்டமாக தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம் நடிப்பில் மகாவீர் கர்ணா என்ற திரைப்படத்தை ஆரம்பித்தனர். இந்த படத்தை மலையாள இயக்குனர் ஆர் எஸ் விமல் இயக்க ஒப்பந்தமானார். சில நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. ஆனால் அதன் பின்னர் சில காரணங்களால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இப்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாகவும், தயாரிப்பு நிறுவனம் கைமாற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கலான் படத்துக்குப் பிறகு விக்ரம் இந்த படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.