1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (20:11 IST)

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த ரசிகர்கள்

விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய ரசிகர்கள் ரத்த தானம் செய்துள்ளனர்.

 
நடிகர் விக்ரம், வருகிற செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 17) தன்னுடைய 52வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அதை முன்னிட்டு, அவருடைய தென் சென்னை மாவட்டம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரத்த தான முகாமை நடத்தியுள்ளனர். 
 
சென்னை, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த ரத்த தான முகாம் நடைபெற்றது.