வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: சனி, 14 ஆகஸ்ட் 2021 (23:39 IST)

’விக்ரம் 60 ’பட ஷூட்டிங் நிறைவு...வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம்.  இவர் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம்60 என்ற படத்தின் ஷூட்டிங் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர் தற்போது துருவநட்சத்திரம் மற்றும் கோப்ரா போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், விக்ரம் படத்தில் நடிக்கவுள்ள படம் ’விக்ரம் 60’ . இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் சமீபத்தில் வெளியானது.

இப்படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் துருவிற்கு இப்படத்தில் ஜோடி இல்லை. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே விக்ரமுடன் இணைந்து சிம்ரன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விக்ரம் 60 படத்தின் முழு ஷூட்டிங் இன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.