1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 5 அக்டோபர் 2023 (18:07 IST)

’லியோ டிரைலர் திரையிடப்படுமா? ரோகிணி தியேட்டரில் குவிந்திருக்கும் விஜய் ரசிகர்கள்..!

தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ட்ரெய்லரை ரோகிணி தியேட்டர் பார்க்கிங் பகுதியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் கோயம்பேடு காவல்துறை அதிகாரிகள் சென்னை காவல்துறை ஆணையரிடம் அனுமதி வாங்க அறிவுறுத்தியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் மூன்று மணியிலிருந்து விஜய் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கம் முன் குவிந்துள்ளதாகவும் ரோகிணி திரையரங்கில் லியோ ட்ரெய்லர் வெளியிடப்படுமா என்பது உறுதி செய்யப்படாத நிலையில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி  ரோகிணி திரையரங்க வளாகத்தில் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியிட முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆனால் எந்த இடத்தில் என்பது குறித்து இன்னும் சில நிமிடங்களில் தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த ஆவலுடன் விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் ரோகிணி திரையரங்கின் முன் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva