வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (12:20 IST)

அந்த கேரக்டர் தளபதி விஜய்தான் பண்னனும்! – சொன்னது ஹாலிவுட் டைரக்டர்!

உலக புகழ்பெற்ற மணி ஹெய்ஸ்ட் தொடரின் இயக்குனர் தன் படத்தை இந்தியாவில் எடுத்திருந்தால் அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய்தான் சரியாக இருப்பார் என கூறியுள்ளது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளியுள்ளது.

ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழலில் சத்தமின்றி வெளியாகி உலக லெவல் ஹிட் அடித்த நெட்பிளிக்ஸ் தொடர் மணி ஹெய்ஸ்ட். ஏற்கனவே மூன்று சீசன்கள் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்த ஸ்பானிஷ் தொடரின் நான்காவது பாகம்தான் தற்போது வெளியானது. இந்த நான்காவது சீசன் இந்த ஆண்டிலேயே அதிகம் பார்க்கப்பட்ட வெப்சீரிஸாக உள்ள நிலையில், இந்தியாவில்தான் இதற்கு அதிக பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர்.

ப்ரொபஸர் எனப்படும் ஒருவரின் தலைமையில் பணத்தை கொள்ளையடிக்கும் ஒரு கூட்டத்தின் கதைதான் மணி ஹெய்ஸ்ட். இந்த முக்கிய கதாபாத்திரமான ப்ரொபஸர் பார்க்க நடிகர் விஜய்யை போலவே இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் கூறிவந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தனியார் பொழுதுபோக்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த மணி ஹெய்ஸ்ட் தொடரின் இயக்குனர் அலெக்ஸ் ரோட்ரிகோ தனது வெப் சிரீஸை இந்தியாவில் எடுத்திருந்தால் ப்ரொபஸர் கதாபாத்திரத்திற்கு விஜய்யைதான் தேர்ந்தெடுப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் போகாடா கதாப்பாத்திரத்திற்கு அஜித்தும், பெர்லின் கதாப்பாத்திரத்திற்கு ஷாரூக் கானும், டமாயோவுக்கு மகேஷ் பாபு, டென்வராக ரன்வீர் சிங், சௌரஸாக சூர்யா கரெக்டாக பொருந்தி போவார்கள் என ரோட்ரிகோ கருத்து தெரிவித்துள்ளார். அதை தொடர்ந்து மணி ஹெய்ஸ்ட் சிரிஸ் பக்கமாக திரும்பியிருக்கும் விஜய் ரசிகர்கள் அதுகுறித்த ஹேஷ்டேகுகளையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.