சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (12:00 IST)

மீண்டும் வரலாற்று படத்தில் விஜய்! இயக்குனர் இவரா அவரா?

நடிகர் விஜய் இப்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் அவர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. இப்போது பீஸ்ட் படத்தில் நடிக்கும் அவர் அடுத்து வம்சி இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பின்னர்தான் அடுத்த படத்தில் நடிக்கும் முடிவை எடுப்பார். ஆனால் அவர் அடுத்து நடிக்கும் கதை ஒரு வரலாற்றுக் கதையில் நடிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது சம்மந்தமாக கிசுகிசு பாணியில் தகவலும் வெளியாகியுள்ளது. நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்படும் ஒருவர்தான் இந்த படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் குறிப்பாக சசிகுமார் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணியில் உள்ளதாக தெரிகிறது.