1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 22 மார்ச் 2017 (10:42 IST)

விஜய் நடிக்கவிருந்த படத்தில் இப்போது விஜய் ஆண்டனியா?

கடைசியாக சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த அதிரடி திரைப்படமான ‘தம்பி’ வெளியானது. பிறகு 2008 வாழ்த்துகள் படம் எடுத்தார். அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான் நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்.

 
இயக்குநர் சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டில் பகலவன் என்ற படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்குவதாக இருந்தது. முதலில் ஒப்புக்கொண்ட விஜய் கதையில் இருக்கும் அரசியலைப் பார்த்து பின்வாங்கினார். சீமானும் அரசியல், தேர்தல் என்று  தொடர்ந்து பிஸியானார். இதற்கு இடையில் சிம்பு நடிப்பதாக கூறப்பட்டது, பிறகு அதுவும் கைவிடப்பட்டது.
 
இந்நிலையில் இப்போது பகலவன் கதையில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில்  வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
விஜய் ஆண்டனி வரிசையாக நல்ல கதைகளாக எடுத்து நடித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் கேரக்டருக்கும் உடல்வாகுக்கும் பகலவன் கதை மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்தக் கூட்டணி சாத்தியமாகி இருக்கிறது. பகலவன் விஜய் ஆன்டனிக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும் என்கிறார்கள். இன்னொரு முக்கிய தகவல் நடிகர் விஜய் குடியிருந்த  வீட்டில்தான் விஜய் ஆண்டனி வசித்து வருகிறாராம்.